The Origins - Nambiar Song MAKING - HD ///என் பையன் ராகுலோட ‘தி ஒரிஜின்ஸ்’ ஷார்ட் ஃபிலிம்ல,அவனே பாடின நம்பியாரு பாட்டோட மேக்கிங்... செம கலாட்டா சியர்ஸ்ஸ் guys

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிறந்த புத்தகங்களே நல்ல நண்பன்..

முகநூல் நண்பர் திரு பெ.கருணாகரனின் ‘காகிதப் படகில் சாகச பயணம்’ நூல் பற்றிய சிறிய விமர்சனம்..

சிலுவைகளையும் சிறகுகளாக்கிப் பறந்த ஒரு பட்டாம்பூச்சியின் நெகிழ வைக்கும் கால் நூற்றாண்டு சிறகடிப்பு..திருப்பங்களும்,சவால்களும் நிறைந்தது தான் வாழ்க்கை..அதை எல்லாரும் ஏதோ விதத்தில் வேண்டுமோ வேண்டாமோ கட்டாயம் சந்தித்து தான் ஆக வேண்டும்,இது இயற்கையின் நியதி..
படகோட்டி,எந்த சூறாவளியோ சுனாமியோ வந்தாலும்,சிறிது கூட சஞ்சலமில்லாமல் துடுப்பை இயக்க வேண்டும்..இங்க மனம் தான் துடுப்பு..எதற்கும் அஞ்சாமல்,சக பயணிகளை எந்த பாதிப்பும் இல்லாமல் கரை சேர்க்க வேண்டும்..பொதுவாக எல்லாருக்கும் வாழ்வில் கஷ்டம்,சுகம், துக்கம் எல்லாமே இருந்திருக்கும்..ஆனால் அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று துச்சமாக எண்ணி சவாலை முறியடித்திருக்கிறார்..இதைப் படித்தவுடன்,போராட்டமே வாழ்க்கை என்று அவ்வப்பொழுது துக்கப்படும் நான்,நான் பட்டதெல்லாம் ஒரு கஷ்டமே இல்லை என்றுணர்ந்து விட்டேன்..எல்லாருமே தான்,வெற்றி பெற்றதையும்,வாழ்த்துக்களால் மகிழ்ந்ததையும் பற்றியுமே எழுதுவார்கள்..ஆனால் தான் பெற்ற அவமானங்களையுமே அசால்ட்டாக எழுதியிருக்கிறார்..
போர்க்களத்தில் பொம்மை சிப்பாய்கள்,சில நேரங்களில் சில மனிதர்கள்,கலாட்டா கல்யாணம்,திரு மாலன் சார் அவர்களை நினைவு கூர்ந்ததும்,கமல் என்ன உங்க பக்கத்து வீட்டுக்காரரா,அண்ணன் காட்டிய வழி,இவைகளை படித்ததும்,உயரத்தில் இருக்கும் இந்த மனிதர்,விஷ்வரூபமாய் எழுந்து விட்டார்..குறிப்பாக,குழந்தை விருத்தாம்பிகை பற்றி எழுதியது படித்ததும்,கண்ணில் நீர் கோர்த்து விட்டது..மனம் கனத்து,அலை பேசியில் பேசும் போது சற்றே குரல கமற நெகிழ்ந்துவிட்டேன்..
குறிப்பாக அத்தனை இடர்களையும் பொறுத்துக் கொண்டு பயணித்த திருமதி லக்‌ஷ்மி கருணாகரனுக்கு வானத்தனை வந்தனங்கள்..
திரு கார்ட்டுனிஸ்ட் முருகு அவர்களின் வடிவமைப்பும்,மேடம் சுபா வெங்கட்டின் அணிந்துரையும் படகிற்கு முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது..
எந்தக் குதிரையும்,முதலில் வருவதற்காகச் சந்தோசமோ,கடைசியில் வந்ததற்கு,வருத்தமோ அடைவதில்லை,ஓட்டம் மட்டுமே சந்தோசம்..எனக்கு மிகவும் பிடித்த வரிகள்...சியர்ஸ்ஸ் மச்சி..
பயணிகள் பயணிக்க அணுக kagithapadagu@gmail.com
எனக்குத் தெரிந்த முறையில் விமர்சித்துள்ளேன்.சிறியவளை பொறுத்தருள்க..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உன் நேசத்தை
சிறை பிடிக்க
இயலாமல்
காற்றோடு கலந்து 
வரும்
உன் வாசத்தில்
கலந்து விட்டேனடி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

போன வாரம் என் ஃப்ரெண்ட் ஒருத்தங்க எனக்கு பாபா போட்டோவும் ப்ரசாதமும் அனுப்புவது போல் கனவு வந்தது..ரொம்ப ரொம்ம்ப ஆச்சரியமாக உணர்ந்தேன்,கனவில் கண்டது போலவே அந்த ஃப்ரெண்ட் அனுப்பிருந்தாங்க..அதுவும்,சத்சரிதம் அத்29 பாபாவால் ஷாமவிற்கு கொடுக்கப்பட்டு காசு உள்ள பாபாவின் படம்,
அது ஷாமா மறைந்து 80 வருடம் ஆகியும் சீரடியில் பூஜை செய்யப்படும் அரிய புகைப்படம்,அழகாக,லேமினேட் செய்யப்பட்டு,என் வீட்டுக்கும் ஆஃபிஸிலும் மாட்டும்படி மிக நேர்த்தியாக கொரியரில் அனுப்பி இருந்தார்..இது வரை இந்த மாதி எனக்கு கனவு வந்ததுமில்லை,கனவில் வந்ததும் நடந்ததும் இல்லை..இதான் முதல் முறை..எனக்கு இனிமேல் அனைத்தும் நன்மையாக நடக்கும்,தொட்டதெல்லாம் துலங்கும் என்று பாபா உணர்த்துகிறாரோ..   நன்றி சொல்லி போஸ்டர் போடாதே என்று சொன்னாங்க,ஆனாலும் இந்த அதிசய சம்பவத்தை என்னால் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை..அது நம்ம குரு இந்து மதி தான்...
இந்த கொரியர் வந்த ஒரு மணி நேரத்தில் எனக்கு ரெண்டு நனமைகள் நடந்தது..இது முரளி ரொம்ப சந்தோசமா உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னார் அவருக்காக சொல்லிட்டேன் குரு 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மனதை பொத்தலாக்கும்
வார்த்தைகளை
மட்டுமே
எப்போதும்
ப்ரசவித்தாலும்
ஏனோ உன் பால்
ஈர்ப்பு...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆண்களே உங்கள்,மனைவி,பெண்கள்,சகோதரிகளுக்காக

கட்டாயம் படியுங்கள்..கொஞ்சம் பெரிய தகவல் தான்..பொறுமையாக படியுங்கள் ப்ளீஸ்..
நா தெனமும் போயிட்டு வர ஒரு ஏரியால ஒரு திருப்பத்தில் ஸ்பீடு ப்ரேக்கர் இருக்கும் மெதுவாக போகும் போது,அந்த மூலையில் ஒரு வீட்டுப் பெண் வெளியில் இருக்கும் மாடிப்படியில் நின்று கொண்டோ அல்லது,தலையை உணர்த்திக் கொண்டோ இருப்பார்..ரொம்ப அழகா இருப்பாங்க..அம்பது வயசு மாதியே இருக்காது,பேத்தியே எடுத்துட்டாங்க (பேசும் போது வயச சொன்னார்) ஆனாலும் பார்வைக்கு 30 வயது மாதி இருப்பாங்க..பார்க்கையில் ஒரு சின்ன புன்னகை,தலையசைப்பு இவ்ளோதான் எங்க ஃப்ரெண்ட்ஷிப்..
ரெண்டு மாசமா அவங்கள பாக்கல,என்னாச்சு,ஊருக்கு போயிருப்பாங்களோன்னு நானே நினைச்சுக்கிட்டேன்...போன வாரம் என் பொண்ண ட்ராப் பண்ணிட்டு வரப்போ பார்த்தேன்,ரொம்ப டல்லா,முடியெல்லாம் கொட்டி,கண்ணைச் சுற்றி கருவளையம்,பாக்கவே ஒரு மாதி இருந்தாங்க..என்னை பாத்துட்டு நில்லுங்கன்னு சொல்லிட்டு,எப்படி இருக்கீங்க எங்க இருக்கீங்க எல்லாம் கேட்டாங்க..ரெண்டு பேரும் பரஸ்பரம் நலம் விசாரிச்சதுக்கு அப்புறம்,ஒடம்பு சரியில்லை,ப்ரெஸ்ட் கேன்சர்,ஒரு மார்பகத்தை நீக்கியாச்சுன்னு ரொம்ப வருத்தமா அழுதாங்க..எனக்கு பயங்கர ஷாக்,எப்டி திடீர்னு என்னாச்சு கேட்டதும்,இல்ல முதல்லயே எனக்கு சந்தேகம் இருந்தது,ஆனா வீட்டுல யார்ட்டயையும் சொல்லல,முத்தினதும் தான் சொன்னேன்னு அழுதாங்க..
சின்ன தலவலின்னாக்கூட வீட்டுல இருக்கவங்க கிட்ட சொல்லணுமில்லையா..பெண்கள் 30 வயசை கடந்தாலே,மார்பக புற்று நோய் வர சான்ஸ் இருக்கு..தினமும்,சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்..
கைகளை மேலே உயர்த்தியபடி நின்றால், கண்ணாடியில் மார்பக அளவுகளில் வித்தியாசங்கள் இருந்தால் தெரிந்துகொள்ள முடியும். காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள், அந்த பகுதி சருமங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தாலும் கண்டுபிடித்துவிடலாம். மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சிலருக்கு மார்பகங்களில் நீர்க்கட்டிகள் தோன்றி மறையும். அதை புற்றுநோய் கட்டியாக நினைத்து பயந்துவிடக்கூடாது. அதனால் மாதவிலக்கு முடிந்த பத்து நாட்கள் கழித்து சுய மார்பக பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.குறிப்பாக,40 வயதை கடந்தாலே மேமோகிராம் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்..
மார்பகத்தை புணர்ச்சிக்காக இருக்கும் ஒரு உறுப்பு போல் காட்டி கொச்சைப் படுத்தையில் பார்க்கவே வேதனையாக உள்ளது..அந்த வருத்தமும்,வேதனையும் இந்த புற்று நோய் இருப்பவர்களை ஒரு முறை நினைத்து பார்த்தால் அதை ஒரு காமத்தை தூண்டும் உறுப்பாக மட்டும் நினைக்க மாட்டார்கள்,கீழ்த்தரமாக இங்கே வர்ணித்து,பட கமெண்டுக்கள் போடுபவர்கள் நிறுத்துங்களேன்..நம் வீட்டு பெண்களுக்கும் அதே உடல் தான் அதே மார்பகங்கள் தானே..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வருடும் தென்றலும்
மழைச் சாரலும்
ராஜாவின் இசையும்
போதுமானதாய்
இருந்தது
உனை நினைக்க..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS